எதிர் கட்சியினர் தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டு விமர்சனங்களுக்கு பொது மேடையில் நேரடியாக விளக்கமளிக்க தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
கோபி அருகே உள்ள நம்பியூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் 315 பயனாளிகளுக்கு 2. 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டை,விலையில்லா வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்ட மானியம் தொகை,மற்றும் விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது
நம்பியூரில் கொடுக்கப்பட்ட நிதியில் பேருந்துநிலையம் மற்றும் வணிக வளாக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடற்பாடுகளையும் சரி செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது..எதிர் கட்சியினர் இதில் தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டு விமர்சனங்களுக்கு பொதுமேடையில் நேரடியாக விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன்.
வேறு மாநிலங்களுக்கு லாரிகளில் அனுமதியின்றி மண் எடுத்து சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களித்த மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்து வருகிறோம். எந்த தடைகள் வந்தாலும் அதனை தகற்தெரிந்து பணிகளை தொடருவோம் என்றார். நிகழ்ச்சியில் கோட்டாசியர் ஜெயராமன், தாசில்தார் வெங்கடேஸ், ஆவின் சேர்மன் காளியப்பன். நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம். பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கெளசல்யா ஈஸ்வரமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் கருப்பண கவுண்டர். சேரன் சரவணன்.அருண் மஹால் பிரபு, எம்.எம்.எம்.செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்