இதெல்லாம் ரொம்ப தப்புங்க...அரசாங்க நிலத்தை கல் நட்டி ஆக்கிரமித்த ‘தனி ஒருவருவருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் இருந்து பச்சாங்காட்டுபாளையம் செல்லும் ரோட்டோரத்தில் கற்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். 


இந்த இட ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள்.மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி அருள்புரத்தில் இருந்து பச்சாங்காட்டுபாளையம், குங்குமம்பாளையம் செல்லும் சாலையில் பி.ஏ.பி.கிளை வாய்க்கால், உயர் மின் அழுத்த கம்பி பாதை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு காவிரி தண்ணீர குழாய், கிராம மக்களுக்கு ஊராட்சி குடிநீர் குழாய் ஆகியவை சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

இவ்விடத்தை தனக்கு சொந்தமானது என்று கூறி தனியார் ஒருவர் திடீரென்று சாலையோரமாக கல் நட்டியுள்ளார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

 

பல ஆண்டுகாலமாக பொது இடமாக இருந்த இடம் தற்போது ஆக்கிரமிக்கப்படுவது அக்கிரமம் என பொதுமக்கள் தெரிவித்தனர். 

 

சம்பவ இடத்தை பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். ஆவணங்களை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் தேவராஜ் கூறியத:. அருள்புரம் பச்சாங்காட்டுபாளையம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

 

இந்த நிறுவனங்களுக்கு லாரி,வேன், பெரிய சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. அருள்புரத்தில் இருந்து பச்சாங்காட்டுபாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் செல்லும் சாலை குறுகியதாக இருப்பதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

 

அதனை ஏற்று சாலை விரிவாக்கம் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் ஒருவர் தனக்கு சாலையோரம் அதுவும் பி.ஏ.பி.கிளை வாய்க்கால் ஒட்டியுள்ள இடம் சொந்தம் என்று கூறி எல்லை கற்களை நட்டினார் அதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் அப்பணியை பாதியில் நிறுத்தியுள்ளார்.

 

இட ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மக்களை திரட்டி அறவழியில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Previous Post Next Post