பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தேசம் காக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் கோரிக்கையாக கொரோனா தொற்று காரணத்தினால் வேலையிழந்த அனைவருக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை சிறப்பு கொரோனா நிதியாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. உடனடியாக இந்த மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்.
தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு உடனடியா திறுத்தத்தை நிறுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து வரும் நிலையில் அதை 12 மணி நேரமாக மாற்றம் செய்யத் துடிக்கும் மத்திய அரசு உடனடியாக 8 மணி நேரத்தை அமல்படுத்த வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று காலங்களில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நலவாரியம் அமைப்பதில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கையில் கட்சி கொடிகளுடன் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்..
Tags:
மாவட்ட செய்திகள்