பழனியில் மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்




பழனியில் மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அறவழி போராட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி சென்றுள்ள நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் உள்ளது.

 

இந்திய நாடு சமத்துவமான சமய சார்பற்ற நாடாக விளங்கிக் கொண்டிருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு மதத்திற்கு மட்டும் ஆதரவு தரும் வகையில் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. மேலும் இந்நிகழ்வு இந்திய அளவில் அனைத்து மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

 

நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

 

இணையம் தொலைத் தொடர்பு தடையை நீக்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சிவில் பிரச்சினையை கிரிமினல் குற்றம் ஆக்கி முஸ்லிம் ஆண்களை சிறைப்படுத்தும் சிறுபான்மை மக்கள் விரோத முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொருளாதாரப் பேரழிவை கொரோனோவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக அக்பர்அலி முன்னிலையாக சிஎஸ்ஐ மாநில தலைவர் அப்துல் ரகுமான், மாவட்ட தலைவர் கைசர் அலி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் பாவேந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில பொறுப்பாளர் ஜலால்முஹம்மது மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கையில் கட்சிக் கொடிகளுடன் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 

 




Previous Post Next Post