விழாவில் பிரதமர் மோடி பேசியது:
ராமருக்கான ஒரு புனித ஆலயம் இங்கு கட்டப்பட்டு இருக்கிறது. உடைவதும், மறுபடியும் எழுந்து நிற்பதும் இங்கு தொடர்ந்து கொண்டு இருந்த நிலையில், இப்போது அதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.
ஆகஸ்ட்.15 சுதந்திரத்தின் மீதான எண்ணத்தை ஏற்ப்படுத்தி இருந்ததை போல, இன்று ராமர் கோவிலுக்காக இருந்த போராட்டங்கள், அர்ப்பணிப்பு காரணமாக இந்த கனவு நனவாகிக் கொண்டு இருக்கிறது.
நான் அனைவருக்கும் 130 கோடி மக்களின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் எண்ணமும் ராமஜென்ம பூமி என்ற நோக்கில் இருக்கிறது.
ராமர் அனைவருக்கும் ஆசீர்வாதம் அளிக்கிறார்; அவர் நம்மில் கலந்து இருக்கிறார்.
ராமர் கோவில் தற்கால கலாச்சாரத்தின் சின்னமாக இருக்கிறது. இந்த இடம், இந்த கோவில் தேசத்துக்கான அடையாளமாக இருக்கும்.
இந்த இடத்தின் புனிதமும், பொருளாதாரமும் மாறிவிடும். ஒவ்வொரு பகுதியில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகம் முழுவதும் இருந்து மக்கள் இங்கு வருவார்கள்.
உலகம் முழுவதும் ராமரையும், சீதாவையும் தரிசிக்கும், இந்த கோவில் நாட்டை இணைக்கக் கூடிய ஒரு கூடமாகும். நிகழ்காலத்தை கடந்த காலத்தோடு இணைப்பது இந்தக் கோவிலாகும்.
ஒவ்வொரு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லும், மண்ணும் நீரும் இந்த கோவிலில் கலந்து இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இதுவரையில் நடக்கவில்லை.
ராமச்சந்திரன் சூரியனுக்கு சமமானவன், அறிவில் பிரகஸ்பதியை விட சிறந்தவர், புகழ்ச்சியில் இந்திரனை விட உயர்ந்தவர்.
ராமரின் புகழ் தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் கம்போடியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளில் பல்வேறு பெயர்களில் பரவி உள்ளது.
அயோத்தியில் இந்த கோவில் உலகம் உள்ளவரை இருக்கும்.
உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ராமருக்கு சமமான ஒரு நீதிமான் கிடையாது.