நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. கனத்த மழையுடன் அதிதீவிர காற்றும் வீசுவதால் பல இடங்களில் ஆங்காங்கே மரங்கள விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனை காவல் துறையினர் பல பிரிவுகளாக பிரிந்து ஓவ்பொரு கிராமத்திலும் முகாமிட்டு இதர அரசு துறையினருடன் சேர்ந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 1500 காவல் ஆளினர்கள் ஒரு முகப்படுத்தபட்டு பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 60 ஆளினர்களை கொண்ட 2 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையிலும் 52 ஆளினர்களை கொண்ட 3 சிறப்பு இலக்கு படை குழுக்கள் 1 காவல் ஆய்வாளர் தலைமையிலும் 24 ஆளியர்களை கொண்ட 2 சிறப்பு பிரிவுகள் ஆயுத படையை சேர்ந்த 6 குழுக்களும் தாலுக்கா காவலர்களை கொண்ட 5 குழுக்களும் கோவை மாவட்டத்தை சேர்ந்த 1 குழுவும் 5 அதிவிரைவு படைகள் இந்த பேரிடார் பணிக்கென நியமிக்கபட்டுள்ளனர்.
இவர்கள் முறையே உதகை மஞ்சு10 கின்னக்கொரை அவலாஞ்சி அப்பர் பவானி எமரால்டு போர்ட்டி மந்து தலைகுந்தா கூடலூர் நாடுகானி தேவாலா சேரம்பாடி ஆகிய முக்கிய இடங்களில் நிலை நிறுத்தப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 568 நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பான தங்கும் இடங்களுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் காயம்பட்ட நபர்களுக்க உரிய சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக அரசு மருத்துவ மனைகளில் உரிய குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இயற்க்கையின் சீற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் நடவாமல் தடுக்கவும் போக்குவரத்தை சீர் செய்யவும் அசம்பாவிதங்களை தடுக்கவும் அனைத்து வகையான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பொது மக்கள் உரிய காரணமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் வாகனத்தில் பயணம் செய்வோர் முன்னெச்செரிக்கையோடு வாகனங்களை இயக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாழ்வான பகுதியிலுள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேற ஏதேனும் உதவிகள் தேவைபடின் அருகிலுள்ள காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.