பொது இடங்களில் குடை போட்டு சிம் கார்டு விற்பனை செய்வதை தவறு என்று காவல்துறை அறிவித்தும் அதை மீறி கோபிசெட்டிபாளையம் எஸ்.டி.என் காலனியில் குடை போட்டு சிம்கார்டு விற்றுக் கொண்டிருந்தனர், அதனையடுத்து கோபி நம்பியூர் செல்லுளார் சங்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக அப்பகுதிக்கு வந்த உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் குடை மற்றும் சிம் கார்டுகளை அப்புறப்படுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் சிம் கார்டு விற்பனை செய்பவர்களை எச்சரித்து இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் நடைபெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எச்சரித்து அனுப்பினர். காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் துணை ஆய்வாளர் பன்னீர்செல்வத்திற்கு செல்லுலார் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
Tags:
மாவட்ட செய்திகள்