கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையால் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி பாதிப்படையாத நிலையில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து 2020- 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான ஐந்து வயது முடிந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு உத்தரவிட்டிருந்ததுமேலும் 6, 9, மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் மாணவர்களை சேர்த்திட அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 108 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் மன்னர்மன்னன், விமலா, ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் 17 திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
மங்களூர் ஒன்றியத்தில் நாவலூர், ஆவினங்குடி, கொட்டாரம், இடைச்செருவாய், ராமநத்தம், சி.ஆலத்தூர், ஒரங்கூர்,பாசார், கழுதூர், தொண்டங்குறிச்சி,ஆவட்டி, கல்லூர் உட்பட 108 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதியதாக சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள், பாடகுறிப்பேடு, சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கப்பட்டு வருகிறது.ஒன்றியத்தில் தொடர்ந்து சேர்க்கை நடைபெற்று வருகிறது.
Tags:
மாவட்ட செய்திகள்