90 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தரமான தார்சாலை அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து மேல வீதி தெற்கு வீதி மற்றும் வெள்ளாறு வழியாக அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தை இணைக்கும் சாலையை தார்சாலை அமைத்து தர வேண்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆற்றல்மிகு அண்ணன் ஆ. அருண்மொழிதேவன் அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் அதனை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் குடிமராமத்து நாயகன் அண்ணன் எடப்பாடியார் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் மாண்புமிகு SP. வேலுமணி அவர்களிடம் ஆற்றல்மிகு செயலாளர் அண்ணன் ஆ.அருண்மொழிதேவன் அவர்கள் பரிந்துரை செய்திருந்தார் இதனையடுத்து தமிழகஅரசு தார் சாலை அமைக்க 90 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து பணிகள் துவங்கி தரமான தார் சாலை அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திட்டக்குடி நகர வங்கி தலைவரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் நகர கழக செயலாளருமான அரங்க.நீதிமன்னன் தலைமையில் தொழிலதிபரும் முன்னாள் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருமான கங்காதரன் பிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மருதை மணி நகர வீட்டு வசதி சங்க தலைவர் முல்லை நாதன் இளைஞரணி ராஜவேல் கூட்டுறவு சங்க இயக்குனர் ராமர் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரெங்கநாதன் மற்றும் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நிர்வாகிகள் ரிப்பன் வெட்டி சாலையை போக்குவரத்திற்கு திறந்து வைத்தனர் இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
Tags:
மாவட்ட செய்திகள்