கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி ஊராட்சியை சேர்ந்த பூ,ராமநாதபுரம் கிராமத்தில் வேப்பூர் செல்லும் சாலையில் முத்துகருப்பு என்னும் கோயில் உள்ளது
இக்கோயிலின் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த ராயப்பன் மகன் சின்னசாமி (வயது 50) என்பவர் தினந்தோறும் பூஜை செய்து வருகிறார்
நேற்று வழக்கம் போல் காலை ஏழுமணிக்கு கோயிலுக்கு வந்து விளக்கேற்றிவிட்டு அங்கிருக்கும் மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டிக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றிவிட்டு பின்னர் கோயிலை பூட்டிவிட்டு சொந்த வேலை காரணமாக பக்கத்து கிராமமான நிராமணி என்னும் ஊருக்கு சென்றுள்ளார்
அரை மணிநேரம் கழித்து கோயிலுன் உள்பகுதியில் வைத்திருந்த சுவாமிகளுக்கு பூஜை நேரத்தில் சாத்தக்கூடிய அங்கவஸ்திரங்கள், குடிநீர் ஏற்றும் பிளாஸ்டிக் பைப் ஓஸ் ஆகியவைகள் உள்ளே எரிந்துள்ளன
இது குறித்து ரோட்டில் சென்றவர்கள் பூசாரி சின்னசாமிக்கு போன் செய்துள்ளனர் உடனே வந்துகோயிலை திறந்து பார்த்தபோது எரிந்து கொண்டிருந்த அங்கவஸ்திரங்கள், தேங்காய்,மற்றும் பூஜை பொருட்களை தண்ணீர் ஊற்றி அனைத்து பின்னர் வெளியில் எடுத்து போட்டுள்ளார்
இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலிசார் கோயிலுக்கு தீவைத்தது மர்மநபர்களா, மின்சார கசிவா என விசாரணை செய்து வருகின்றனர்
Tags:
மாவட்ட செய்திகள்