பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் 5 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது .
பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் நேற்று 5 வீடுகள் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தன, அருகிலிருந்த 2 வீடுகள் சிறிதளவு பாதிக்கப்பட்ட நிலையில் திராவிட முன்னேற்ற கழக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ,பாய், தலையணை, போர்வை மற்றும் ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் வீதம் 5 குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் இதர பொருட்கள் போன்றவை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் பழனி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
மேலும் இது போன்று மக்களுக்கு ஏற்படும் துன்பத்திலும், துயரத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் ஆறுதலாகவும், உறுதுணையாகம் இருக்கும் என்றும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலும், இந்த துயர சம்பவம் கேட்டு மிகவும் வேதனைக்கு உள்ளாகியதாகவும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக உதவ வேண்டுமென்றும் ஆணை இட்டதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். இந்நிகழ்வில்
ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் பேரூர் கழக செயலாளர் சுப்புராம் முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவர் சோ.காளிமுத்து முன்னாள் செயலாளர் முத்துசாமி இளைஞர்அணி இதயத்துல்லா ரமேஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
Tags:
மாவட்ட செய்திகள்