குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் சசிகலா பிறந்த நாள் விழா நகரின் பல இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து நல உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குடியாத்தம் நகர செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சேவல் நித்தியானந்தம் ஏற்பாட்டின் பேரில் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் கட்சியின் அமைப்புச் செயலாளருமான வழக்கறிஞர் ஜெயந்தி பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார்.
செருவங்கி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு மரக்கன்றுகள் அப்பகுதிகள் ஜெயந்தி பத்மநாபன் நாட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
காமாட்சியம்மன் பேட்டையில் குமார் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு காமராஜர் பாலம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே இனிப்புகள் வழங்கப்பட்டன பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 25 ஆயிரம் பேருக்கு முக கவசம் வழங்கினார்
அதுமட்டுமில்லாமல் கொரோனா வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளை அவரவரின் மதத்தின்படி நல்லடக்கம் செய்யும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு சுமார் 50 கவச உடை பிபி கிட் அவர்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் மற்றும் வானகடை பாபு ஈஸ்வரப்பா செருவங்கி பாஸ்கர் தனஞ்ஜெயன் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
Tags:
மாவட்ட செய்திகள்