இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு

 


 

கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துறையூர் கணேச பாண்டியன் ஏற்பாட்டில் பெயரில் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்தார். 

 

விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன்,முன்னாள் எம்எல்ஏவும், அறங்காவலர் குழு தலைவருமான மோகன், அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு எடுத்துரைத்தார், மேலும் அதற்கான விண்ணப்ப படிவங்களையும் வழங்கினார்.

 


 

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி அதிமுக நிர்வாகிகள் தாமோதரன், மகேஷ்குமார், பாலமுருகன், நீலகண்டன், பழனிக்குமார், சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்....

 

"சமூக இடைவெளியுடன் மக்கள் தனித்திருப்பது மூலமாகத்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி , அனைத்து உலக நாடுகளும் மார்ச் 23 முதல் சுய ஊரடங்கினை கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் மார்ச் 23 முதல் சுய ஊரடங்கினை கடைப்பிடித்து கொரோனா  தாக்கதினை வெகுவாக குறைத்து உள்ளோம். 

 

இந்தச் சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நிவாரணங்களை அனைத்து தரப்பினருக்கும் தமிழக முதல்வர் வழங்கினார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000, நான்கு மாதம் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக பொருட்கள் , மேலும் ஒவ்வொரு தரப்பினராக பார்த்து பார்த்து அவர்களின் தகுதிக்கு மற்றும் நிலைக்கு ஏற்ப நிவாரண தொகையை தமிழக முதல்வர் வழங்கினார்.

 

அமைப்புசாரா தொழிலாளர்கள் 83 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் இரண்டு முறை வழங்கியுள்ளார். அனைத்து தரப்பினருக்கும் சுய ஊரடங்கு நேரத்தில் நிவாரணங்களை முதல்வர் வழங்கினார்.மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு வழிகாட்டலின் படி தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார்.ஹோட்டல் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசியமான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

 


 

இ பாஸ் வழங்குவதில் கடுமையான வழிமுறைகள் முதலில் இருந்தாலும் , தற்போது இ பாஸ் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறு ஆலயங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது, பெரிய வழிபாட்டுத் தலங்களில் இயற்கையாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது அனுமதி அளிக்கப்படவில்லை.

 

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள். இந்தியாவில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு முதன்முதலில்  அனுமதி தந்தது தமிழக அரசுதான்.சினிமா படப்பிடிப்பு பொருத்தவரை நேற்றுதான் மத்திய அரசு வழிகாட்டுதல் முறைகளை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசனை நடத்தி, உரிய வழிமுறைகளை ஏற்படுத்தி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார். 

 

மக்கள் நலன் கருதி தான் இ.பாஸ் நடைமுறை எளிமைப் படுத்தப் பட்டுள்ளது.கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தவிர தாக்கம் முழுவதுமாக குறையவில்லை. கொரோனா முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான பணிகளை  அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு வரும் நேரத்தில் படிப்படியாக இ.பாஸ் முறையை குறைப்பதற்கும் முதல்வர் முடிவு செய்வார்.விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ.பாஸ் கிடைக்கும் வகையில் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

 

டுவிட்டரில் விநாயகர் சிலை படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளது , இது அவர்களுக்கு (திமுக)  ஏற்பட்டுள்ள காலத்தின் கட்டாயம்,இந்துக்களை இழிவாக பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாகக் கொண்டிருந்தார்.அதிமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வழியில் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தி வருகிறது.சிறுபான்மை மக்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்களை திமுக ஏமாற்றி வருகிறது.

 

சிறுபான்மை மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்தது அதிமுக,இந்துக்கள் உணர்வுகளைப் புரிந்து யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற வகையில் மத நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்வது அதிமுக தான், அதிமுகவின் கொள்கையும் அதுதான்,மக்கள் திருநீறு பூசுவதை கூட சாம்பலைப் பூசுகிறார்கள் என்று பலமுறை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ராமர் என்ன பாலம் கட்டினார்,  ராமர் என்ன பொறியாளரா, கட்டிட வல்லுனரா என்றும் விமர்சனம் செய்தவர்கள் திமுக, ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கேவலமாக கவிதை எழுதினார்.இதனை பலரும் எதிர்த்த பின்னர் அதில் அடக்கத்தை காட்டினார்கள்,கந்த சஷ்டி கவசம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஒட்டு மொத்த இந்து மக்கள் கொதித்து எழுந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் திமுகவினர் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள் தவிர அது உண்மையான சொரூபம்  அல்ல,தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் திமுகவின் உண்மையான சொரூபம் அது கிடையாது, 

 

காலம் காலமாக இந்துக்களை பழித்து வருவது வாடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,அதிமுகவில் இருப்பவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சரியான கருத்தை தான் தெரிவித்துள்ளார்,

 

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால்  அதற்கு அனைவரும் ஒற்றுமையாக  கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் தவிர மாறுபட்ட கருத்து ஏதும் அவர் தெரிவிக்கவில்லை" என்றார்

Previous Post Next Post