கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 25 வீடுகளில் வசித்த 82 பேர் மண்ணில் புதைந்து பலியானார். மொத்தம் இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 நபர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.
இதில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் இந்தராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கைலி, துண்டு, மாஸ்க், கிளவ்ஸ், பேஸ்டு, பிஸ்கட்டு, பிரட்டு, ரஸ்க் பாக்கட் உற்பட சுமார் ரூ 25,000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை நிறுவனர் இந்திராசுந்தரம் வழங்கினார்.
இந்த நிவாரண பொருட்களை சின்னாறு செக்போஸ்டில் கேரளாவை சேர்ந்த கவர்மெட் கிளப் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.