திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 16/08/2020 இன்று முதல் துவங்கியுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம்.
மாணவர்கள் இணையத்தில் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இணைய முகவரி www.skilltraining.gov.in .இணையத்தில் விண்ணப்பிக்க இயலாத வர்கள் நேரில் பயிற்சி நிலையத்திற்கு வந்து உதவி சேவை மையத்தை அணுகலாம்.
பயிற்சி பெறு பவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி மிதிவண்டி, சீருடை பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் வழங்கப்படும்.
மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில்நிறுவனங்களில் இன்டர்ன்சிப் ட்ரெயினிங் உதவித்தொகையுடன் கொடுக்கப்படும்.பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற வேண்டும் மேலும் விபரங்களுக்கு 8608920392, 7708433777, என்ற எண்னை தொடர்பு கொள்ளவும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.