எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒரு புது வரவாக வந்துள்ள லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்ட அதிசக்தி கொண்ட வாகனங்களை திருப்பூர் சி.கே. மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது.
இது தொடர்பாக திருப்பூர் பத்திரிகையாளர்களை சந்தித்த சி.கே.மோட்டார்ஸ் நிறுவன முதன்மை மேலாண் இயக்குநர் சந்திரசேகர், இணை மேலாண் இயக்குநர் கிருஷ்ணகுமார், வர்த்தகப்பிரிவு தலைவர் குணசேகரன் ஆகியோர் கூறியதாவது:
தற்போதுள்ள சர்வதேச பிரச்சனையான, சுற்றுசுழல்மாசுபடுவதைதெளிவாக கருத்தில் கொண்டு திருப்பூரைச் சேர்ந்த சி.கே.மோட்டார்ஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் பசுமையான மற்றும் நிரந்தரமான போக்குவரத்திற்காக லித்தியம் பேட்டரியல் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபெட்டுகள் மற்றும் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது.
சி.கே.மோட்டார்ஸ் நிறுவனத்தார் ஒரு முழுமையான மின்சார வாகனத் தொழிற்சாலையை கோவையில் நிறுவி வருகிறார்கள். இந்த தொழிற்சாலையானது இன்னும் இரண்டு மாதங்களில் முழு உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சி.கே.மோட்டார்ஸின் மின்சார வாகனங்கள் தீவிர ஆராய்ச்சியில் உருவான லித்தியம் -
சி.கே.மோட்டார்ஸின் மின்சார வாகனங்கள் தீவிர ஆராய்ச்சியில் உருவான லித்தியம் - அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த பிரத்யேக தொழில்நுட்பதிற்கு இந்தியகாப்புரிமை கழகத்தில், காப்புரிமை சான்றிதழ் பதிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை சந்தையில் அறிமுகமான அனைத்து மின்சார வாகனங்களையும் தீவிரமாக ஆராய்ந்து அதில் காணப்படுகின்ற அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்குதலில் உள்ள இன்னல்களை, சுத்தமாக தவிர்த்து சிறு குறை கூட இல்லாத வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து வகையான சாலைகளுக்கும், போக்குவரத்து சூழ்நிலைகளுக்கும் மற்றும் உபயோகிப்பாளர்கள் வாகனங்களை கையாளும் முறைகளுக்கும் மிகவும் உகந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் சிறப்பம்சங்கள் வருமாறு:
1. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மணிக்கு 65 கிமீ வேகம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கி.மீ செல்லும். 2. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மணிக்கு 35 கிமீ வேகம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கி.மீ செல்லும்.
3.எலக்ட்ரிக் மொபட், மணிக்கு 35 கிமீ வேகம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ செல்லும்.
4. எலக்ட்ரிக் சைக்கிள், மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.
சி.கே.மோட்டார்ஸ் நிறுவனமானது மிக விரைவில் மின்சார பைக்குகளையும், மின்சார மூன்று சக்கர மற்றும் 4 சக்கர சரக்கு வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.
சி.கே.மோட்டார்ஸின் முதல் விற்பனை ஷோரூம் மற்றும் உபயோகிப்பாளர்கள் அனுபவ மையத்தை சி.கே.மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், 19, ஆஷெர் நகர், 60 அடி சாலை, அவினாசி ரோடு, திருப்பூர் &3, டெராய் மோட்டார்ஸ், லட்சுமி கல்யாண மண்டபம் எதிரில், பல்லடம் சாலை, திருப்பூர்&2, சி.கே. மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், கடை எண்: 5, மாநகராட்சி வணிக வளாகம், ப்ரூக் பான்ட் சாலை, கோவை ஆகிய முகவரிகளில் தொடங்கப்பட உள்ளது.
மேற்கண்ட விபரங்களை சி.கே.மோட்டார்ஸ் தலைமை நிர்வாக இயக்குனர் சி.சந்திரசேகரன், இணை நிர்வாக இயக்குனர் சி.கிருஷ்ணகுமார், வணிக தலைவர் டாக்டர் சி,குணசேகர் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்,
மேலும் அவர்கள் கூறுகையில். மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி ஷோரூம்களை வரும் 21ம் தேதி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் திறந்து வைக்கிறார். தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள மற்ற அனைத்து நகரங்களிலும் விநியோகஸ்தர்களை நியமிக்க உள்ளது.
சி.கே.மோட்டார்ஸின் மத்திய விற்பனை மற்றும் சேவை அலுவலகங்கள் சென்னையில் அமைக்கப்பட்டு, மிகவும் அனுபவமிக்க பொறியாளர்களை கொண்டு, விற்பனைக்கு பின் சேவையை உபயோகிப்பாளர்கள் இடத்திலேயே அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என தெரிவித்தனர்.
மேலும் தகவல்களுக்கு தலைவர் (வர்த்தகம்) டாக்டர் சி.குணசேகரனை 9090903666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.