தாறுமாறா தயாரிக்கிறாங்க...உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிவித்தது ரஷ்யா...தமிழ்நாட்டில் இலவசமா கிடைக்குமா?

உலகம் முழுக்க ஏழரை லட்சம் பேரை கொன்று குவித்து விட்டது சீனாவில் உருவான கொரோனா வைரஸ்.

 

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இபடியாக உலகம் முழுக 150க்கும் மேற்ப்பட்ட தடுப்பூசிகள் பல்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன. 

 

இந்தியாவில் கோவாக்சின்,  பிரிட்டன் மற்றும் சீனாவின் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. 

 

இந்த நிலையில்,  கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது. இரண்டு மாதத்தில் அது தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு செய்து உள்ளது.

 

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறும் போது:

 

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

 

கொரோனா தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ரஷியா அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

 

ரஷியாவின் கமலேயா ஆய்வு மையம், கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இம்மையம், மனிதர்களிடம், இரு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.

 

ஆனால் இம்மையம், மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு முன், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த, ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பரில் தடுப்பூசி தயாரித்து, அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வர, ரஷியா திட்டமிட்டுள்ளது.

 

 

இத்தகைய சூழலில், மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளாமல், தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளித்துள்ளது எனவும் இப்படி அனுமதி அளிப்பது ஆபத்தானது என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

இது குறித்து ஜார்ஜ் டவுன் பல்கலை, சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் கூறியதாவது:

 

ரஷியா, விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்காது. மாறாக, சுகாதார சீர்கேடு தான் ஏற்படும். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், தடுப்பூசி மருந்தின் தன்மை தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

இப்படி மூன்றாம் கட்ட பரிசோதனையை செய்யாமல் நேரடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ரஷ்யா தனது வெற்றியை கொண்டாடுகிறது. 

 

அதே நேரம் ரஷ்யா கூறி உள்ள அக்டோபர் மாதத்துக்குள் பல நாடுகள், கொரோனா தடுப்பூசியை முழு சோதனையையும் கடந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

 

இதன் விலை ரூ. 250 வரை ரூ.1000 வரையில் இருக்க வாய்ப்பு உள்ளது. அது எவ்வளவு  விலை இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்போதைய அரசு அதை இலவசமாகவே மக்களுக்கு போட்டு விடுவார்கள் என்ற பேச்சு நிலவுகிறது. 

 

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நம் நாட்டில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மாதம் ஒரு கோடி பேருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், உலகளவில் பல நாடுகள், பல மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்வதால், இந்த வருட இறுதியில் கிட்டத்தட்ட நாட்டில் உள்ள பாதி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசியானது போடப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

 

யாருக்கு முதலில் கிடைக்கும்?

 

இப்போதைய நிலையில் நமது தமிழ் நாட்டில் முன்களப்பணியாளர்களாக பொதுமக்களை காக்கும் பணிகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்பட இன்னபிற அரசுத்துறையினருக்கு முதலில் கிடைக்கும். அவர்களுக்கு போடப்படும் அதே நேரத்தில் முதியவர்களையும், குழந்தைகளையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி போடுவார்கள். 

 

ஆக, 2021-ல் கொரோனா இருக்காது என நம்புவோமாக.. 

 

 

 

Previous Post Next Post