நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல பகுதிகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் மற்றும் பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லமுடியாத சூழ்நிலையில் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட பல மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று கொலக்கம்பை அருகே உள்ள மூப்பர்காடு மற்றும் மானார் ஊஞ்சலார்  கோமபை மற்றும் கோட்டக்கள் அருகே உள்ள வீரக்கொம்பை மற்றும் நீராடிபள்ளம் ஆகிய ஆதிவாசி குடும்பங்கள் சுமார் 150 நபர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஸ்ரீ சற்குரு சத்திய இராஜ யோக ஞான ஆசிரமம் சார்பாக வழங்கப்பட்டது.


இதில் மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேனுகாதேவி மற்றும் சற்குரு ஆசிரம சுவாமி மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராஜ் வார்டு உறப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்


Previous Post Next Post