திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்க கோரி மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட  எஸ்.வி காலனி பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்ததை அடுத்து அந்த பகுதி முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார் .


மாவட்ட ஆட்சியர் சென்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து வாங்க தங்களை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.மேலும் வெளியாட்கள் யாரும் வெளியே இருந்து உள்ளே வரக்கூடாது என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.


Previous Post Next Post