விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவுக்கு பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானார்.

 


 

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள் ,ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

 இவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர் இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த விருதாச்சலம் தாசில்தார் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.

 

இவர் விருத்தாசலம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் ஆக பணிபுரிந்து வந்தவர் கவியரசு வயது 48 இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி ஏற்பட்டது இதையடுத்து அவர் பரி சோதனை மேற்கொண்டதில் கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது தொடர்ந்து கவியரசு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி கவியரசு கடந்த சனிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

 

 விழுப்புரத்தை சேர்ந்த கவியரசுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் அவர் இறந்த தகவலை அறிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

Previous Post Next Post