தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.
*கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளில் யோகா பயிற்சியும் ஒன்றாகும். அதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாகும். ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு யோகா பயிற்சியளிக்க உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 50 சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. பின் அனைவருக்கும் கப சுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், வடபாகம் குற்றப்பரிவு காவல் ஆய்வாளர் பிரபாவதி, ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுனை முருகன், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.*
*இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், தலைமை காவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியை யோகாவில் தேர்ச்சி பெற்ற முதல் நிலைக் காவலர் ராஜலிங்கம் கற்றுக்கொடுத்தார்.*
*மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 25 உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.
Tags:
மாவட்ட செய்திகள்