ஆடி அமாவாசை சிறப்பு சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத் இத்திருக்கோவிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் அமைந்துள்ளது.
ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு 108 முறை அரச மரத்தை சுற்றிவந்தால் வேண்டிய காரியம் நிறைவேறும் திருமணம் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பலன்களை அளிக்கக் கூடியது.
ஆடி அமாவாசை மற்றும் திங்கட்கிழமை சேர்ந்து வருவதால் மிகப்பெரிய நன்மை உண்டாகும். இத்திருக்கோவில் அரசமரத்தடியில் ஸ்ரீ ராஜ முனியப்பன் அமைந்துள்ளார்
கோயிலின் உட்புறத்தில் வீரஸ்த்தாள் புத்தம்மன் மற்றும் 15 அடி உயரமுள்ள முண்ணுடையான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மாதா மாதம் வரும் அமாவாசை நாட்களில் அரச மரத்தை 108 முறை வலம் வருவதால் நினைத்த காரியம் நிறைவேறும் அதேசமயம் திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவாரம் அமாவாசை மிகவும் சிறப்பு அதேபோல் ஆடி மாத அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் விடுவது போன்றவற்றிற்கு மிகவும் சிறப்பு அளிக்கக்கூடியது.
இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் விட்டு வழிபட்டால் மிகவும் நன்மையானது அரச மரத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் வெளிவருகிறது இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது அரசமரம் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது காலை 4மணி முதல் 6 மணிக்குள் சுற்றி வருவது சிறப்பானது நம் முன்னோர்களின் அறிவியலும் ஆன்மீகமும் கலந்துள்ளது.