திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.
நேற்று வரை 258 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு இருந்தது. இன்று 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ள நிலையில் மொத்த பாதிப்பு 265 ஆக உயர்ந்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஏரியா வாரியாக:
திருப்பூர் போயம்பாளையம் பிரிவு நஞ்சப்பா நகரை சேர்ந்த 22 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. திருப்பூர் யுனிவர்சல் ரோட்டில் 35 வயது ஆணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
திருப்பூர் டி.எஸ்.ஆர்., லே அவுட்டை சேர்ந்த 57 வயது ஆண், காங்கயம் சாலை கான்வெண்ட் கார்டன் பகுதியை சேர்ந்த 80 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பல்லடம், இச்சிப்பட்டி, தேவராயம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும், வெள்ளகோவில், மயில்ரங்கம், பாப்பாவலசு பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதில் போயம்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த 22 வயது ஆண், வெளி மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டதால், திருப்பூர் தொற்று எண்ணிக்கை இன்று 6 மட்டும் என தெரிவிக்கபப்ட்டு உள்ளது.
திருப்பூரை சேர்ந்த 81 வயது ஆண் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சென்ற ஒரு மணிநேரத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.