நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகரித்து வருகிறது. அதிக பரிசோதனைகள் காரணமாக அதிக எண்ணிக்கை தெரிய வருவதாக அரசு தரப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 2027 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் 2,316 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நோய் பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் உயிரிழந்து உள்ளனர் .
மொத்தமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,392 ஆக உள்ளது. இதில் பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 3,095 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மொத்தமாக இதுவரை 56,021 பேர் குணமாகி வீடுகளுக்கு சென்று உள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 273 பேர், செங்கல்பட்டில் 171 பேர், திருவண்ணாமலையில் 170 பேர், திருவள்ளூர் 164 பேர், வேலூரில் 137 பேர் என சென்னை அல்லாத மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மற்றும் அரியலூரில் இன்று புதிய தொற்று இல்லை.
தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,321ஆனது.
இந்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை சமூகப்பரவல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளை கண்டறிவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். என்றும் அவர் கூறியுள்ளார்.