தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொற்றுப்பரவலின் வேகம் குறைந்து உள்ளது.
1 ஆம் தேதி 3882 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 2 ஆம் தேதி 4343 பேருக்கு தொற்று 3-ஆம் தேதி 4,329 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 4-ம் தேதி 4,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 5 ஆம் தேதி 4,150 பேருக்கு தொற்று உறுதியானது. 6-ம் தேதி 3,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
சென்னையில் வெகுவாக பாதிப்பு குறைந்ததே கொரோனா பரவல் வேகம் குறைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரில் மட்டும், 1-ம் தேதி 2,182 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 2 ஆம் தேதி 2,027 பேருக்கு தொற்று 3-ஆம் தேதி 2,082 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 4-ம் தேதி 1,842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 5 ஆம் தேதி 1,713 பேருக்கு தொற்று உறுதியானது. 6-ம் தேதி1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் 1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஜூலை மாத தொற்று பரவல் கண்டறியப்பட்டதை கணக்கிடும் போது கடந்த 2 நாட்களாக பரவல் வேகம் குறைந்து உள்ளது.
நேற்று (6-ம் தேதி) தமிழக அளவில் 3,827 பேருக்கும், சென்னையில் மட்டும் 1,747 பேருக்கும் தொற்று பரவல் கண்டறியப்பட்டு இருந்தது. இன்று தமிழகத்தில் 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையில் 1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாதத்தில் கடந்த 2-ம் தேதி 4,343 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது தான் தமிழக அளவில் அதிக எண்ணிக்கை ஆகும். அதன் பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக பரவல் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம் என்பது 2-ம் தேதி பதிவான 4,343 பேர் என்ற அளவே ஆகும்.
கடந்த 6 -ம் தேதி வரை இருந்த சென்னையின் முழு ஊரடங்கு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை கொரோனா தொற்று பரவல் குறையக் காரணம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இனி, கொஞ்சம் கொஞ்சமாக நோய்த்தொற்று வேகம் குறையுமானால், தமிழ்நாட்டில் கொரோனாவின் முதல் அலை உச்சத்தை அடைந்ததுடன், தற்போது குறைந்து வருவதாக கூறலாம்.
ஆனால், வெறும் நான்கு நாட்கள் எண்ணிக்கையை வைத்து மட்டும் இதை கணக்கிட முடியாது. மேலும் சில நாட்கள் பார்க்க வேண்டும். அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே தொற்று தீவிரம் குறைந்ததாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.
அதே நேரம், பொதுமக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இதையும் தாண்டில் இன்னொரு உச்சத்தை கொரோனா அடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இன்றைய நிலையில் , தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,18,594 ஆக உயர்ந்து இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,575 ஆக உயந்து உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை 71,116 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று சென்னை கிண்டியில் கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது: