திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா...97 கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 97 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபப்ட்டு உள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 97 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஏரியா வாரியாக வருமாறு:


திருப்பூர் மாநகரில் பிரைம் என்கிளேவ் அபார்ட்மெண்டில் 37 வயதுடைய இரண்டு ஆண்கள், 29 வயதுடைய ஒருவர் என 3 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. திருப்பூர் பாண்டியன் நகர், திருவள்ளுவர் வீதியில் 55 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெருப்பெரிச்சலில் 49 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெரியார் காலனி சாமிநாதபுரத்தில் 31 வயது ஆணுக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.


திருப்பூர் வீரபாண்டியில் 70 வயது ஆணுக்கும், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாப்பண்ணன் நகரில் 41 வயது ஆணுக்கும், 42 வயது ஆணுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


திருப்பூர் மாஸ்கோ நகரில் 36 வயது ஆணுக்கும், வாவிபாளையம் பகுதியில் 28 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 


ஸ்வர்ணபுரி அவென்யூவில் 18 வயது பெண் மற்றும் 51 வயது பெண், ஆண்டிபாளையத்தில் 72 வயது பெண் மற்றும் 20 வயது பெண் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது.


திருப்பூர் சூசையா புரத்தில் 50 வயது ஆண் மற்றும் 24 வயது பெண்ணுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது, மேலும் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 50 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அமர்ஜோதி நகரில் 38 வயது ஆணுக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அமர்ஜோதி நகர் அறிவுத்திருக்கோவில் பகுதியில் 35 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 


தாராபுரம் பெரியார் நகரில் 39 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


திருப்பூர் போடிப்பட்டியில் 23 வயது ஆணுக்கும் லட்சுமி நகரில் 28 வயது ஆணுக்கும் என மொத்தமாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 


கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் 97 பகுதிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 


Previous Post Next Post