திருப்பூரில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. நேற்று 16 பேருக்கு தொற்று ஏற்ப்பட்ட நிலையில் மாவட்ட அளவில் 220 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று 6 பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் குன்னத்தூரில், பல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண், ஆதியூர் 63 வயது ஆண், தட்டாங்குட்டையில் 30 வயது ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் குண்டடத்தில், சக்திவிநாயகபுரத்தில் 67 வயது ஆண், அலகுமலையில் 58 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாநகரில், காலேஜ் ரோடு, திருவிக நகரில் 58 வயது பெண், கோவில் வழி புதுரோட்டில் 23 வயது பெண், சந்திராபுரத்தில் 25 வயது பெண், வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகரில் 55 வயது ஆண், சிவசுப்பிரமணியம் நகர் 29 வயது பெண், தம்பி தோட்டம், அருண்நகரில் 33 வயது ஆண், கே.செட்டிபாளையத்தில் 38 வயது ஆண், காலேஜ் ரோட்டில் 36 வயது ஆண், காங்கயம் ரோடு, சிடிசி பகுதியில் 28 வயது ஆண், ராக்கியாபாளையம் செந்தில் நகர் 31 வயது பெண், நல்லாத்துப்பாளையம் தங்கம் நகரில் 21 வயது ஆண், சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 53 வயது ஆண் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது.
மொத்தத்தில் திருப்பூர் மாநகரில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று தமிழக அளவிலான பாதிப்பு 3,616 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 237 ஆனது. 96 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 12 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதன் மூலம் 141 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.
வீடுகளில் 3,286 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.