ஊரடங்கு காலங்களில் உணவின்றி தவித்து வந்த ஊனமுற்றோர் மற்றும் கண் பார்வை இழந்தவர்களுக்கு காவலர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்றுநோய் காரணமாக பலரும் வேலை இழந்து உணவின்றி தவித்து வந்த நிலையில் இதில் கண்பார்வையற்றோர் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பவானி காவல் நிலையத்தில் ஆய்வாளர் தேவேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பவானி சுற்றுப்பகுதிகளில் பவானி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சேகர் தலைமை தாங்கி வழங்கினார்
பவானி காவல் நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி வழங்கினார் பின்பு வெளியே செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து செல்லவேண்டும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கைகால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு வீட்டுக்குள் வர வேண்டும் என்றும் . சத்தான உணவு பொருட்களை உண்ண வேண்டும் அதுமட்டுமல்லாமல் அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டால் கொரோனாவைரஸிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளு முடியும் என்று அறிவுரை வழங்கினார் இந்த விழாவின்போது பவானி காவல் உதவி ஆய்வாளர் வடிவேல் குமரன் சண்முகம் சந்திரன் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Tags:
மாவட்ட செய்திகள்