சென்னை மதுரையில் முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரமடைந்து உள்ளது. நேற்று மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.


இதில் சென்னை அதிகளவு பாதிக்கப்படும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் மதுரை, திருவண்ணாமலை, வேலூர், மாவட்டஙகளிலும் கொரோனா தொற்றுப்பரவல் வேகமெடுத்து உள்ளது.


இந்நிலையில் நாளையுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை ஜூலை மாத இறுதிவரை நீட்டித்துள்ளன.


தமிழ்நாட்டில் ஊரடங்கு தேவையில்லை; நோய்ப்பரவல் தீவிரமாக உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு போடலாம். மற்ற மாவட்டங்களில் தேவை இல்லை என்று சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்து இருந்தனர்.


இந்த நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.


தமிழக அரசின் அறிவிப்பு எதிர்பார்ப்பு உள்ள நிலையில மாவாட்ட நிலவரததை பொறுத்து ஊரடங்கு நீட்டுக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.


 


Previous Post Next Post