3 சிறுவர்கள், 2 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு...திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 


41 நாட்களாக தொற்று இல்லாமல் இருந்த திருப்பூர் மாவட்டத்தில் திடீரென தொற்று எண்ணிக்கை ஆங்காங்கே தென்பட ஆரம்பித்தது.


இந்த நிலையில் இன்று மட்டும் 14 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 141 ஆக உள்ளது. இதில் 24 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மீதியுள்ள அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர்.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொற்று பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்களில் திருப்பூர் மாநகரைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர். 


இதில் திருப்பூர் மாநகரில் இரண்டு கர்ப்பிணி பெண்கள், ஒரு 4 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


அவிநாசியில் ஒரு 45 வயது ஆண், உடுமலையில் 54 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 


தாராபுரத்தில் 11 வயது சிறுமி, 7 வயது சிறுவன் உள்பட ஆறு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 


பல்லடத்தில் ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 


ஆக மொத்தம் இன்று மட்டும் 14 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 141 ஆக உள்ளது. 


பொதுமக்கள் சமூக இடைவெளி, கை கழுவுதல், மாஸ்க் அணிவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


 


Previous Post Next Post