70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன.
இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது.
திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர்.
கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது பொள்ளாச்சி உடுமலை தாராபுரம் செல்லும் பேருந்துகள் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்வழி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
இதேபோன்று தனியார் பேருந்துகள் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகிறது இதேபோன்று மினிபஸ் பேருந்துகளிலும் வட்டார போக்குவரத்து துறையினரின் அனுமதி பெற்று அறிவுறுத்தலின்படி பஸ்கள் இயக்கப்படுகிறது.
கட்டண உயர்வு ஏதும் செய்யப்படவில்லை இன்னும் சில நாட்களில் பஸ்களில் செல்ல கூட்டம் வரும் என பஸ் கண்டக்டர் தமிழ்செல்வன் என்பவர் தெரிவித்தார்.
Tags:
மாவட்ட செய்திகள்