திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் தலைகாட்ட துவங்கி உள்ளது.
ஆரம்பம் முதல் 114 பேருக்கு வைரஸ் பரவல் இருந்த நிலையில் 41 நாட்கள் புதிய தொற்று இல்லாமல் இருந்தது.
இதனால் திருப்பூர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர். இந்தநலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் ஓரிரு பாதிப்புகள் தென்பட ஆரம்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது. 116 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் நாலு பேரு மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் கடந்த 18ஆம் தேதி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட திருப்பூர் மங்கலத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ஆவார். ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்த இவர் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று வந்தபோது வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வாலிபர் கடந்த 18 ஆம் தேதி முதல்
கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ்க்கு முதல் பலி ஏற்ப்பட்டு உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.