தமிழ்நாட்டில் இன்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்தமாக 25,872 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகி உள்ளது.
இதில்இன்று மட்டும் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மேலும் இதுவரை, 14,316 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இன்னும் 11,345 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இன்று மட்டும் 14,101 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,286 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் நூற்றுக்கு 11 பேருக்கு (10.96%) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதுவரை மொத்தமாக 5,28,534 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இன்று கொரோனாவுக்கு 11 பேர் செத்துப்போய் விட்டனர். இதுவரை 208 பேர் செத்திருக்கிறார்கள்.
சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பரவலின் வேகம் அதிகம் ஆகி உள்ள நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகழுவதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்த்து விடுகிறார்கள்.
இது கொரோனா பரவல் மேலும் அதிகமாவதற்கு வழிவகுக்கும் என்பதால், தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் எந்தவொரு தொய்வும் இல்லாமல் பின்பற்ற வேண்டும்.என சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.