திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துகிருஷ்ணன் உதவித்தொகை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துகிருஷ்ணன் உதவித்தொகை  வழங்கினார்.




திருவண்ணாமலை மே 14 - திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள சாதுக்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் விபூதி பாக்கெட்டுகளை ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துகிருஷ்ணன் வழங்கினார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் உள்ளனர். இவர்களுக்கு பொதுமக்கள், ஆன்மீக அமைப்புகள் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் சார்பில் உணவு மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வாழ்வாதாரமிழந்துள்ள சாதுக்களுக்கு உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துகிருஷ்ணன் சாதுக்கள் மற்றும் முதியோர்கள், ஆதரவற்றவர்கள் என 2 ஆயிரம் பேருக்கு தலா ரூ.50 வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் விபூதி பாக்கெட்டுகளையும், கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான கையுறை முகக்கவசம் கிருமிநாசினி கைகழுவ சோப்பு போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

அதனைத் பெற்றுக் கொண்ட சாதுக்கள் அண்ணாலையாரே தங்களுக்கு உதவிபுரிவதாக கருதி முத்துகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவர் செய்துவரும் பணிகளை பார்த்து மேலும் சில அன்பர்களும் சாதுக்களுக்கு உதவிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்றும் மனநிறைவடன் வாழ வேண்டுமென்று சிவனடியார்கள் வாழ்த்தினர்.


Previous Post Next Post