கீழ்ச்செருவாயில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்புசார்பில் நிவாரணம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் ஊராட்சியில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

 


 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெரங்கியம் தொழுதூர் ம.பொடையூர் இடைச்செருவாய்

உட்பட்ட  பல்வேறு ஊராட்சிகளில் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் ஊராட்சியில் நிவாரணம் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கூட்டமைப்பின் ஒன்றிய செயலாளர் லட்சாதிபதி தலைமை தாங்கினார்.

 

கல்வி விழிப்புணர்வு பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், கூட்டமைப்பின் பொருளாளர் சித்தார்த்தன், பேராசிரியர் வீரபாண்டியன், முகாம் செயலாளர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி,ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய ஆதரவற்ற பெண்களின் குடும்பத்தினருக்கு அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வெள்ளையம்மாள், கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எழிலரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் அணி துணை செயலாளர் தடாகணேசன், முகாம் நிர்வாகிகள் பசியவர்ணம், துரைக்கண்ணு, தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய துணை அமைப்பாளர் அருள், ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன் சக்திவேல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post