வேப்பூர் அருகே சிறுபாக்கம் டாஸ்மாக் கடையில் சரக்கு கேட்டு வக்கில் சண்டை; போலிசார் வாகனத்தை சேத படுத்தியதால் கைது


 

வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம் டாஸ்மாக் கடையில் சண்டைபோட்ட வழக்கறிஞர் தடுக்க வந்த போலிசாரின் வாகனத்தை சேதபடுத்தியாதால் கைது செய்யபட்டார்

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா சிறுபாக்கம்  அருகிலுள்ள எஸ்,புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் அருண்குமார் (வயது 29), மதுரையில் வழக்கறிஞருக்கு படித்துவிட்டு தற்போது விருத்தாசலம் நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்து வருகிறார்

 

நேற்று  மாலை 5-30 மணிக்கு அவரது கிராமத்தை சேர்ந்த நண்பரான ராமசாமி மகன் மணிவேல் (வயது- 32) என்பவருடன் சிறுபாக்கம் டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கு கேட்டுள்ளார்.

 

அப்போது அங்கிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் விளங்காட்டூர் கொளஞ்சிநாதன் வழக்கறிஞரிடம் ,  தமிழக அரசு மாலை 5 மணிக்கு கடையை மூட உத்திரவிட்டுள்ளது , அரசு  அறிவித்த நேரம் முடிந்துவிட்டதால் சரக்கு விற்பனை செய்ய முடியாது எங்களுக்கு போலிசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் அதனால் அவர்களிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

உடனே வழக்கறிஞர் அருண்குமார் பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் ராஜ்குமார், மற்றும் ராஜ் என்பவரிடம் சென்று நான் வக்கீல் எனக்கு சரக்கு தரசொல்லுங்கள் என்று கூறியுள்ளார் அதற்கு போலிசாரும் மறுத்துவிட போலீசாரை யும், டாஸ்மாக் சூப்பர்வைசரையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி போலிசாரின் இருசக்கர வாகனத்தை சேதபடுத்தியுள்ளார், மேலும் அவர் வைத்திருந்த சாவியால் போலிசாரின் கையை கீறியுள்ளார்

 

இது குறித்து போலிசார் மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கொளஞ்சிநாதன்  ஆகியோர்  சிறுபாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்

 

புகாரின்படி   திட்டக்குடி டிஎஸ்பி, வெங்கடேசன் உத்திரவின் பேரில்  வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறுபாக்கம் எஸ்ஐ, கலியமூர்த்தி  ஆகியோர்  வழக்கறிஞர் அருண்குமார், மற்றும் அவரது நண்பர் மணிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்

Previous Post Next Post