தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூன்று தினத்திற்கு முன்பு மூடப்பட்டது.
கோயம்பேடு பகுதியில் வேலை செய்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக சென்னையிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த வேப்பூர் போலீசார் திட்டக்குடி வட்டாட்சியர் மற்றும் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர் மற்றும் அதிகாரிகள் அவர்களை 30-4-2020 அன்று தனிமைப்படுத்தி ஆம்புலன்ன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையிலான அதிகாரிகள் கிராம வழித்தடங்களை மூடி கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் கொரோனா பரவல் தடுக்க நேற்று ஊராட்சிமன்ற தலைவர் பச்சையப்பன் தலைமையில் தாசில்தார் செந்தில்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு முன்னிலையில் வேப்பூர் தீயணைப்பு வாகனம் மூலம் கடைபகுதி, அரசு அலுவலகங்கள்,வீடுகள், பொது இடம் மற்றும் கொரோனா பாதித்துள்ள இருவர் வீடு உட்பட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இதில் துணைதலைவர் செல்வி நீலகண்டன், செயலர் தேவேந்திரன்,வார்டு உறுப்பினர்கள் முத்தையா, செல்வி மாணிக்கம்,மதியழகன், ஜோதி தனபால், செல்வமணிகாசிநாதன் மற்றும் தீயணைப்பு அலுவலர் வீரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:
மாவட்ட செய்திகள்