இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சூறாவளி எச்சரிக்கைப் பிரிவு இன்று கூறியுள்ளதாவது:
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இன்று (2020, 16 மே அன்று) காலை ஐந்தரை மணிக்கு அட்சரேகை 10.4°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.0°டிகிரி கிழக்கில், பாராதீப்பிற்குத் (ஒடிசா) தெற்கே சுமார் 1100 கிலோ மீட்டர் தொலைவிலும்; திகாவுக்கு (மேற்குவங்கம்) தெற்கே 1250 கிலோமீட்டர் தொலைவிலும்; கெப்புபராவிற்கு (பங்களாதேஷ்) தெற்கு-தென்மேற்கு திசையில் 1330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது விரைவாக மேலும் வலுவடைந்து இன்று மாலையோ சூறாவளிப் அல்லது அடுத்த 24 மணி நேரத்திலோ கடும் சூறாவளிப் புயலாக உருவெடுக்கக் கூடும். 2020, மே17 வரையிலும் முதலில், வடக்கு வடமேற்கு முகமாக நகர்ந்து, மீண்டும் வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் வடக்கு வடகிழக்கு முகமாகத் திரும்பி, 2020, மே18 முதல் 20 வரை மேற்கு வங்கக் கடற்கரை நோக்கி நகரக் கூடும்.
ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் மே 18 மாலை முதல் ஆங்காங்கே சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே19 அன்று ஒரு சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 2020, மே 20 அன்று வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும்.
கங்கை நதி பாயும் மேற்குவங்கப்பகுதிகளில் 2020, மே19 அன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான, வெகு பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே 20 அன்று சிற்சில பகுதிகளில் ஆங்காங்கே வெகு பலத்த மழை பெய்யக்கூடும்.