கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆணையாளர் தாணு மூர்த்தி உத்தரவுப்படி, துப்புரவு அலுவலர் மணிவண்ணன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழுவினர் மாஸ்க் அணியாமல் அதாவது முகவுரை அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தது வருகின்றனர். இதில் நேற்று (20.05.2020) வரை 495 நபர்களுக்கு 49 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று (21.05.2020) ஒரு நாள் மட்டும் 9 கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 504 நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராதம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு இலவசமாக முகவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாஸ்க் அணியாமல் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
மாவட்ட செய்திகள்