எம்,புதூர் தலைவர் மீது பொய் வழக்கு; தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் டிஎஸ்பியிடம் கோரிக்கை மனு


 

வேப்பூர் அருகிலுள்ள எம், புதூர் ஊராட்சி தலைவர் மீது பொய் புகார் கொடுக்கபட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டுமன தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் டிஎஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர் ,விசிகவினர் கைது செய்யக்கோரி ஆர்பாட்டம் நடத்தினார்கள்

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மேமாத்தூர்,  எம் புதூர் கிராமத்திலுள்ள இரு தரப்பினரிடையே கடந்த 8- ந் தேதி வாய்சண்டை  ஏற்பட்டு கை கலப்பாக மாறியது

 

இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,  புகாரின் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி, வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விசாரணை செய்து கடந்த 9 ந் தேதி இருதரப்பை சேர்ந்த 5 நபர்களை கைது செய்தனர்

 

நேற்று மேமாத்தூரை சேர்ந்த நான்கு பேரை செய்தனர் அதனால் மேமாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமையில் காவல் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

 

இந்நிலையில் விருத்தாசலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் விசலூர் தலைவர்  வழக்கறிஞர் ஜெயசந்திரன்,   காட்டுபரூர் வெங்கடேசன், எடச்சித்தூர் சுப்ரமணியன், எறுமனூர் செம்யா வீரமணி, சின்னபரூர் துரைகீதா, மாவிடந்தல் கதிஜாபீவி உள்ளிட்டவர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் திட்டக்குடி டிஎஸ்பி, வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோரை சந்தித்து எம், புதூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை மீது புதுரை சேர்ந்த சிலரின் தூண்டுதலால்,  தேர்தல் முன் விரோதம் காரணமாக பொய் புகார் அளித்துள்ளனர் ஆகவே அவரது பெயரை நீக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்

Previous Post Next Post