உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கோரிக்கை


 

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ளது.

 

தஞ்சை பெரிய கோயில் மூலம் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகறியச் செய்த ராஜராஜ சோழனுடைய சமாதி கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது.

 

அந்த இடத்தில் மணி மண்டபம் கட்ட மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.  சேயோன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .

அவர் விடுத்துள்ள அறிவிப்பில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

 

உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலை தந்த  மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ளது.  உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜராஜ சோழனுடைய சமாதி மிகவும் சிறிய அளவில் கவனிப்பாரற்று உள்ளது.

 

சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், ராஜேந்திர சிம்மன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் நித்தி வினோதன்,  ராஜகேசரி என பல பட்டங்களைப் பெற்ற ராஜராஜ சோழன் கிபி 985 முதல் கிபி 10 14 வரை சோழப்பேரரசை ஆண்டார் .

தனது உழைப்பால் தஞ்சை பெரிய கோயிலை கட்டி அதன்மூலம் சைவத்தையும், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் உலகறிய செய்த மாமன்னன்.

 

அந்த மாமன்னனின் சமாதி உடையாளூர் கிராமத்தில் மிகவும் சிறிய அளவில் உள்ளது .

தமிழக அரசு உடனடியாக ராஜராஜசோழன் சமாதி உள்ள இடத்தில் மிகப்பெரிய மணி மண்டபம் ஒன்றை கட்டி தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும்  உலகிற்கு பறைசாற்றிய ராஜராஜ சோழனுக்கு ஒரு அழியாத நினைவுச் சின்னத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post Next Post