வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரில் ஒன்பது கேரளா தொழிலாளர்கள் தனிமைபடுத்தபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பா, கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேரளா மாநிலத்தில் வேலை பார்த்து வந்தனர்
கடந்த இரண்டு மாதகாலமாக கொரோனா தடை உத்திரவினால் வேலை இல்லாமல் உணவுக்கு அவதிபட்டு வந்துள்ளனர், அதனால் அங்கிருந்த அவர்களின் முதலாளியின் உதவியுடன் வாடகை வண்டியில் நேற்று முன்தின இரவு வேப்பூர் பகுதிக்கு வந்தனர்
தமிழக அரசின் உத்திரவின்படி, கடலூர் கலெக்டர், அன்புசெல்வன், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்களை தனிமைபடுத்த வேண்டும் என்பதற்கு இணங்க வேப்பூர் தாசில்தார் கமலா , பா,கொத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியன் ஆகியோர் ஒன்பது தொழிலாளர்களையும், வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பரிசோதனை செய்து தனிமைபடுத்தபட்டனர், அவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வூர் ஊராட்சி தலைவர் முனியன் ஏற்பாடு செய்து வருகிறார்
Tags:
மாவட்ட செய்திகள்