திருப்பூரின் முக்கிய பகுதியான குமரன் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திருப்பூரில் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அட்டிகா கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் புகுந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டினார்.
வீடியோ இதோ:
ஹெல்மெட் அணிந்து இருந்த அந்த நபர் நிதி நிறுவன பெண் ஊழியரை அரிவாளை ஓங்கி மிரட்டுவதும், மற்ற்றொரு ஊழியரை பணம் நகையை எடுத்து தர சொல்லி மிரட்டிய காட்சிகள் பதைபதைப்பை ஏற்ப்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு, சாவகாசமாக நடந்து சென்றான். இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுபூலுவபட்டி, காவடிபாளையம் பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு அந்த நகைகளை இதே அட்டிகா கோல்டு நிறுவனத்தில் அடகு வைத்திருந்திருக்கிறார். பலமுறை அங்கு சென்ற வந்த நிலையில், அந்த நிறுவனத்தை நோட்டமிட்டு கொள்ளையடித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அவனை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.