உயிரைப்பணயம் வைத்து கன்டெய்னர் லாரியில் அடைத்துக்கொண்டு பயணம்: 75 பேரை அலேக்காக தூக்கி லாரியை பறிமுதல் செய்த போலீசார்

கன்டெய்னர் லாரியில் 75 வட மாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல முயன்ற இருவர்  கைது. கன்டெய்னர் லாரி பறிமுதல்.தொழிலாளர்களின் இயலாமையை பயன்படுத்தும் வட மாநில லாரி ஓட்டுநர்கள்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லக்கவுண்டம்பாளையம் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அந்த வழியாக வந்த கார்களை ஏற்றிச்செல்லும் கன்டைனர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கன்டைனர் லாரியின் உட்புறம் மறைத்து அழைத்து செல்லப்பட்ட பீஹார் மற்றும் உத்திரபிரதேச தொழிலாளர் 75 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சுமார் 2 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு இப்படி கண்டெயினர் லாரியில் அடைத்துக் கொண்டு பயணம் செய்வதற்காக வந்துள்ளனர்.


வீடியோ இதோ:



லாரியில் வந்த அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், தொழிலாளர்கள் அனைவரும் காங்கயம்,படியூர்,ஊத்துக்குளி மற்றும் முதலிபாளையம் பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும்,கொரானா ஊரடங்கினால் வேலையிழந்ததால் சொந்த ஊருக்கு செல்ல கன்டைனர் லாரியில் வந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து தொரிலாளர்கள் முன்பு வேலை செய்த நிறுவனங்களை தொடர்பு கொண்ட போலீசார், கொரானா முடியும் வரை தொழிலாளர்களை அழைத்து சென்று தங்க வைக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.



சமூக இடைவெளி இன்றியும்,சரக்கு வாகனத்தில் சட்ட விரோதமாக ஏற்றி சென்ற உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மொத் வரீஸ், உதவியாளர்  மொகத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, லாரியையும் பறிமுதல் செய்து  ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தொடர்ந்து இதுபோல் தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பெறும் நோக்குடன் அவர்களை ஆடு மாடுகள் போல் லாரிகளில் அடைத்து அழைத்து செல்வது வேதனைக்குரிய நிகழ்வாக மாறி வருகிறது.


அவ்வாறு பயணம் செய்ய அழைத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என இன்ஸ்பெக்டர் தவமணி தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post