பழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சி சார்பாக 70 லட்சம் மதிப்பிலான கொரோனா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
பழனி அருகே உள்ள புஷ்பத்தூர்,வயலூர், உள்ளிட்ட ஊராட்சி சார்பாக தமிழகத்தில் பரவி வரும் கொரோனோ வைரஸ் எதிரொலியாக வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இதனை போக்கும் விதமாக புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன் தலைமையில் கிராமப்புற ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கினர்.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்வில் 7000 நபர்களுக்கு 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சார் ஆட்சியர் உமா, வட்டாச்சியர் பழனிச்சாமி, காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் புறநகர் காவல் ஆய்வாளர் சையது பாபு உள்ளிட்டோர் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் முத்துச்சாமி மாவட்ட தலைவர் ராசியப்பன் துணை தலைவர் மஞ்சுளாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், நளினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழக அரசு அறிவித்து வரும் சமூக இடைவெளியை கடைபிடித்து இலவச நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்