நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் கிராம பொதுமக்கள் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று ஊராட்சி மன்றதலைவர் மோகன் தனது சொந்த செலவில் கிராம பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கியதோடு அனைவருக்கும் கையுறை முகக்கவசம் சோப்பு கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.
அப்போது ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஒன்றன் பின் ஒன்றாக உணவு பொட்டலங்களையும் வாங்கிச் சென்றனர். அதனைத்தொடர்ந்து கொரோனா முடியும் வரை பொதுமக்கள் முகக்கவசம் அணிவதோடு ஒருநாளைக்கு 10முறையாவது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டுமென்றும், தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கேட்டுக் கொண்டார்.