ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வண்டிப்பேட்டை காமாட்சிஅம்மன் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக கோபி ரோட்டரி சங்கம், விஸ்வகர்மா கைவினைஞர் நல அறக்கட்டளை, கைவினைஞர் முன்னேற்ற கட்சி, விஸ்வகர்மா திருமண தகவல் மையம் ஆகியோர் இணைந்து ரூ1000மதிப்புள்ள அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 250 கைவினைஞர் சமூக மக்களுக்கு வழங்கினார்கள். இதில் கைவினைஞர் முன்னேற்ற கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.ஜி. சரவணன், மாநில பொறியாளர் அணி செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் சிவகுமார்,கோபி நல அறக்கட்டளையின் தலைவர் பி.கே.ஆறுமுகம்,பொருளாளரும், செயலாளருமான ஜி. எஸ்.கந்தசாமி,வி.ஆர். மாணிக்கம், மரக்கடை நடராஜ், சபரி ஸ்டூடியோ கருப்புசாமி, ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர் எல்.ஐ.சி.சீனு(எ)திருவேங்கட சுப்பிரமணியம், செயலாளர் கார்த்திகேயன், உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்