தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவர் உயிரிழந்தார்.
சென்னையில் கடந்த 5 நாட்களில் 675 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் 1256 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இன்று 14 மாவட்டங்களில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
அரியலூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கோயம்பேட்டில் பணியாற்றி அரியலூர் வந்த தொழிலாளர்கள் ஆரம்பித்து பரவல் அதிகமாகி உள்ளது. செங்கல்பட்டில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும், பெரம்பலூரில் 2 பேர், சேலத்தில் இருவர், தேனியில் ஒருவர், திருப்பூரில் இரண்டு பேர், திருவள்ளூரில் 7 பேர், விழுப்புரத்தில் இருவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 1341 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். உயிரிழப்பு 29 ஆக உள்ளது.
இன்னும் 10 நாட்களில் சென்னையில் கொரோனா தொற்ற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.