ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் மில்லில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த (ஆண்கள், பெண்கள் மொத்தம்- 210) பணியாளர்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு 4 பேருந்துகளிலும் மற்றும் இன்று காலை 10.30 மணிக்கு 3 பேருந்துகளிலும் உரிய அனுமதியுடன் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், சிறுவலூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் நம்பியூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மன் பழனிச்சாமி மற்றும் மேலாளர் சபரிநாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.ஆர். பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கே. எம். மகுடேஸ்வரன் தலைமையில் மற்றும் ஏ.ஜி.எம். விஸ்வநாதன் மற்றும் ஜி.எம். பாலசுப்பிரமணியம், டி. எம். ரஞ்சித்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நவாப்ஜான் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் சுகாதார செவிலியர் சத்யபிரியா வார்டு உறுப்பினர் செந்தில் வடக்கு ஊராட்சி செயலாளர் மோகன்குமார் கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் நம்பியூர் ஒன்றிய கழக துணைச் செயலாளர் சம்பத்குமார் முருகையன் முன்னிலையில் அனைத்து நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மற்றும் மாஸ்க் (முககவசம்) கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்