ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட அளுக்குளி ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வறுமையில் வாடும் 2000 ஏழை எளிய குடும்பங்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுறுத்தலின் படி அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்துமதி பாண்டு,ஊராட்சி கழக செயலாளர் பாண்டுரங்கசாமி ஆகியோர் அரிசி,பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள். இதில் கோபி யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், சொசைட்டி தலைவர் கிருஷ்ணசாமி,யூனியன் கவுன்சிலர் மகாலட்சுமி துரைசாமி, ஊராட்சி செயலர் கருப்புசாமி உட்பட கழக நிர்வாகிகள் உள்ளனர்.
Tags:
மாவட்ட செய்திகள்